» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மாணவி பலாத்காரம் : தந்தை உட்பட 2பேர் போக்சோ சட்டத்தில் கைது
ஞாயிறு 12, செப்டம்பர் 2021 8:51:48 AM (IST)
கடம்பூர் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததாக அவரது தந்தை மற்றும் காதலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது தாய், தந்தைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். சிறுமியை அவருடைய தாயார் தன்னுடன் அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் சிறுமிக்கு அந்த பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. கல்லூரி மாணவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்தார்.
இதற்கிடையே, சிறுமியின் தந்தை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுப்பு தெரிவிக்கவே, மகளை மட்டும் தன்னுடன் அழைத்து சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அடிக்கடி வாந்தி, மயக்கம் உண்டானது. இதை அறிந்த தாயார் அங்கு வந்து மகளை தன்னுடன் அழைத்து சென்றார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில், சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதை ேகட்டதும் தாயார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கடம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறுமியை அவளது தந்தையும், காதலனும் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தந்தை மற்றும் காதலனை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

adaminSep 12, 2021 - 01:13:04 PM | Posted IP 162.1*****