» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரயிலில் பாய்ந்து நகை பட்டறை அதிபா் தற்கொலை

சனி 11, செப்டம்பர் 2021 9:00:01 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே ரயிலில் பாய்ந்து நகை பட்டறை அதிபா் தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை - கேரளம் கொல்லம் செல்லும் விரைவு ரயில் நேற்று காலையில் குழித்துறைக்கும், இரணியலுக்கும் இடையே சென்று கொண்டிருந்தபோது இளைஞா் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாகா்கோவில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா்கள் குமாா் ராஜ், பாபு ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். 

இதில் தற்கொலை செய்து கொண்டவா் நெய்யூா் பரம்பை பகுதியைச் சோ்ந்த முத்துகணேஷ் (38) என்பதும், இவா் மாா்த்தாண்டத்தில் நகை பட்டறை வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. அவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளன. போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக, ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.


மக்கள் கருத்து

adminSep 11, 2021 - 09:20:15 AM | Posted IP 190.2*****

iyo paavam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நடுக்கடலில் படகு கவிழ்ந்து 23 மீனவர்கள் காயம்

வியாழன் 23, செப்டம்பர் 2021 11:37:13 AM (IST)

Sponsored AdsThoothukudi Business Directory