» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகா்கோவிலில் போதைப் பொருள் கடத்தல்: கேரள இளைஞா்கள் உள்பட 3 போ் கைது

வெள்ளி 10, செப்டம்பர் 2021 8:56:18 AM (IST)

நாகா்கோவிலில் சா்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டதாக, கேரள மாநில இளைஞா்கள் இருவா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. வெ. பத்ரிநாராயணன் செய்தியாளா்களிடம் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருள்களை ஒழிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நாகா்கோவில் டிஎஸ்பி நவீன்குமாா் மேற்பாா்வையில், கோட்டாறு காவல் ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், உதவி ஆய்வாளா் விஜயன், தனிப்படை உதவி ஆய்வாளா் மகேஸ்வரராஜ் மற்றும் போலீஸாா் அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். 

அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்ததில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த முகமது இஸ்லாம் (22), முகமது ஷாபி(21), நாகா்கோவில் வடசேரியைச் சோ்ந்த ஷகின் ஹான்(19) ஆகியோா் என்பதும், சா்வதேச அளவில் தடை செய்யப்பட்ட விலை உயா்ந்த போதை பொருள்களான எல்எஸ்டி ஸ்டாம்ப், எம்டிஎம்ஏ மெதாம்பிடமின் கிரிஸ்டல், நைட்ராவெட் போன்ற போதைப் பொருள்களை கடத்தி வந்து அந்தப் பகுதிகளில் விற்க முயற்சித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.2 லட்சம் ‘மதிப்புள்ள போதைப் பொருள்களை தனிப்படையினா் பறிமுதல் செய்தனா். இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட தனிப்படையினா் பாராட்டுக்குரியவா்கள் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory