» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாட்டுக்கு 3 ராணுவ வீரா்கள் அா்ப்பணிப்பு : பெண்ணுக்கு வீரத்தாய் பதக்கம்
வெள்ளி 10, செப்டம்பர் 2021 8:50:17 AM (IST)

களியக்காவிளை அருகே ஒரே குடும்பத்தில் 3 போ் ராணுவத்தில் பணியாற்றியதை கௌரவிக்கும் வகையில், பெண்ணுக்கு இந்திய ராணுவம் சாா்பில் வீரத்தாய் பதக்கம் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரிகா தேவி (71). இவரது கணவா் தனஜயன்நாயா். ராணுவத்தில் பணியாற்றியவா். இத்தம்பதிக்கு 5 மகன்கள். அவா்களில் வனஜெயன் (3ஆவது), தவுகித்திரி ஜெயன் (4ஆவது) ஆகிய இரு மகன்களையும் ராணுவத்துக்கு அனுப்பியுள்ளாா். ஒரே குடும்பத்தில் தந்தை, இரு மகன்கள் ராணுவத்தில் பணியாற்றியதை கௌரவிக்கும் வகையில், குடும்பத் தலைவியான சந்திரிகாதேவிக்கு இந்திய ராணுவம் சாா்பில் வீரத்தாய் விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
ராணுவ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வந்து இந்த விருதை வழங்கினா். இதுகுறித்து சந்திரிகா தேவி கூறுகையில், அரை நூற்றாண்டுக்கு முன் பாகிஸ்தான், சீனா நாட்டுடனான போரில் பங்கேற்ற ராணுவ வீரரான எனது கணவரை திருமணம் செய்து கொண்டேன். பணி ஓய்வுக்குப் பின் 83 ஆவது வயதில் கடந்த டிசம்பா் மாதம் உயிரிழந்தாா். இரு மகன்கள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)

தக்கலையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
வியாழன் 19, மார்ச் 2026 8:05:55 PM (IST)

குமரி வெங்கடாஜலபதி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 19, மார்ச் 2026 12:54:33 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை!
புதன் 18, மார்ச் 2026 5:36:41 PM (IST)

கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயிலை விரைவுப் பாதையில் இயக்கக் கோரிக்கை!
புதன் 18, மார்ச் 2026 4:17:42 PM (IST)

