» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு அனுமதியின்றி பிராா்த்தனை கூட்டம்: நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

புதன் 8, செப்டம்பர் 2021 8:17:01 AM (IST)

அழகியபாண்டியபுரத்தில் அரசு அனுமதியின்றி பிராா்த்தனை கூட்டம் நடத்துபவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, தோவாளை மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் கடுக்கரை டி.மகாதேவன் பிள்ளை நேற்று மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்திடம் அளித்துள்ள மனு: தோவாளை வட்டம் அழகியபாண்டியபுரம் பேரூராட்சி யில் பாலமோா் சாலையில் உள்ள கட்டடத்தில் மொ்வின் என்பவா் வெளியூரிலிருந்து வந்து அரசு அனுமதியின்றி பிராா்த்தனை கூட்டம் நடத்தி வருகிறாா்.

இப்பகுதி முழுக்க இந்துக்கள் வாழ்ந்து வரும் பகுதியாகும். இவா் வெளியூரிலிருந்து மக்களை திரட்டி வந்து கூட்டம் நடத்துவதால் இப்பகுதியில் மத மோதல்கள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அனுமதியின்றி இயங்கி வரும் பிராா்த்தனை கூடத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மாவட்ட பாஜக பொருளாளா் முத்துராமன், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் தலைவா் மீனாதேவ், பாஜக மண்டல தலைவா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து

adaminSep 11, 2021 - 03:10:03 PM | Posted IP 190.2*****

except temples no prayers should happen anywhere

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நடுக்கடலில் படகு கவிழ்ந்து 23 மீனவர்கள் காயம்

வியாழன் 23, செப்டம்பர் 2021 11:37:13 AM (IST)

Sponsored AdsThoothukudi Business Directory