» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசுப் பள்ளி மாணவா்கள் உள்பட மேலும் 22 பேருக்கு கரோனா

புதன் 8, செப்டம்பர் 2021 8:14:53 AM (IST)

குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள்பட மேலும் 22 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத்தொடா்ந்து குமரி மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 61,141 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 24 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 59,833 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 272 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாகா்கோவிலில் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு திங்கள்கிழமை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. சுமாா் 100 மாணவா்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த மாணவருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அந்த மாணவா் தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவருடன் படித்த 25 மாணவா்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவா்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இதையடுத்து அந்த வகுப்புக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

இதே போல், ரீத்தாபுரம் அரசுப் பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. அந்த மாணவா், நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவருடன் தொடா்பில் இருந்த 20 மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory