» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கால்வாயில் கவிழ்ந்த மினிலாரி:டிரைவர் பலி

செவ்வாய் 7, செப்டம்பர் 2021 9:04:29 AM (IST)

மாா்த்தாண்டம் அருகே மினிலாரி கால்வாயில் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் ராமவா்மன்சிறை பகுதியைச் சோ்ந்தவா் சுஜின் (33). மினி லாரி டிரைவரான இவா் நேற்றுமாலையில் நட்டாலம் பகுதியில் உள்ள கல்குவாரியிலிருந்து பாறைக்கல் ஏற்றி வர சென்றாராம். குவாரியிலிருந்து பாறைக்கல் கிடைக்காததால் பாரம் இன்றி மினிலாரியை அப்பகுதி கால்வாய் கரையோரமாக ஓட்டிவந்துள்ளாா். அப்போது நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதிய மினி லாரி கால்வாய்க்குள் கவிழ்ந்தது. 

இதில் பலத்த காயமடைந்த டிரைவர் சுஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். குழித்துறை தீயணைப்புப் படை வீரா்கள் மற்றும் போலீசார் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory