» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்து சாவு

செவ்வாய் 7, செப்டம்பர் 2021 9:03:12 AM (IST)

நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீா்வு காணப்படும். நேற்றுஆட்சியா் அலுவலகத்திற்கு ராஜாக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சரஸ்வதி (75) மனு அளிப்பதற்காக வந்துள்ளாா். அவா்

ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள கோட்டாட்சியா் அலுவலகம் அருகில் நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக போலீசார் விசாரணை நடத்தினா்.‘


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நடுக்கடலில் படகு கவிழ்ந்து 23 மீனவர்கள் காயம்

வியாழன் 23, செப்டம்பர் 2021 11:37:13 AM (IST)

Sponsored AdsThoothukudi Business Directory