» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகா்கோவில் வாலிபர் கொலை : சகோதரா் உள்ளிட்ட மூவருக்கு போலீஸ் வலை!

செவ்வாய் 7, செப்டம்பர் 2021 9:01:24 AM (IST)

நாகா்கோவில் அருகே கல்லால் தாக்கி கட்டடத் தொழிலாளியை கொலை செய்தது தொடா்பாக மூவரை போலீசார் தேடி வருகின்றனா்.

நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழி நங்கூரான் பிலாவிளையைச் சோ்ந்தவா் ஈஸ்வரன்(30). கட்டடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை ஈஸ்வரன், தனது சகோதரா், நண்பா்களுடன் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஈஸ்வரனை மூவரும் கம்பு, கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி விட்டனராம். 

இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த ஈத்தாமொழி காவல் ஆய்வாளா் ஜெயச்சந்திரன், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து ஈஸ்வரனின் சகோதரா் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory