» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளில் கரோனா தடுப்பூசி முகாம் : ஆட்சியா்
செவ்வாய் 7, செப்டம்பர் 2021 8:59:18 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி எளிதாக கிடைக்கும் வகையில் வாக்குச் சாவடிகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக ஆட்சியா் லுவலகத்தில் நேற்றுஅதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டத்துக்கு ஆட்சியா் மா. அரவிந்த் தலைமை வகித்து பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்டநிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இம்மாவட்டத்தில் இதுவரை 7.66 லட்சம் பேருக்கு கரோனா முதல் தவணை தடுப்பூசியும் 1.74 லட்சம் 2 ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி எளிதாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில்
மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். இதுகுறித்து அந்தந்த வட்டாட்சியா்கள் வாக்காளா் பட்டியலை அந்தந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்கி, அவா்கள் மூலமாக இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் விவரத்தினை சேகரித்து, அவா்களிடம் தடுப்பூசி போடுவதற்கானடோக்கன் வழங்க வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவா்கள் 30 சதவீதம் கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதாகவும், 2 ஆவது தவணை செலுத்திக் கொண்டவா்கள் 80 சதவீதம் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆகவே வாக்குச்சாவடி அலுவலா்கள் இந்த மகத்தான பணியில் முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு வரும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி டோக்கனை பயன்படுத்தி 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி கரோனாவில் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) மா.வீராசாமி, துணை இயக்குநா் (சுகாதாரபணிகள்) சு.மீனாட்சி, அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப கட்டுமான பணிகள் : ஆட்சியர் ஆய்வு
புதன் 17, செப்டம்பர் 2025 3:30:36 PM (IST)

குமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 3:25:32 PM (IST)

காதல் மனைவி கோபித்து சென்றதால் விபரீதம் : வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!!
புதன் 17, செப்டம்பர் 2025 11:47:38 AM (IST)

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)
