» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஓணம் பண்டிகை: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 21ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
வியாழன் 19, ஆகஸ்ட் 2021 5:25:00 PM (IST)
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற 21ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு : ஓணம் திருநாளினை முன்னிட்டு 21.08.2021 (சனிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
21.08.2021 அன்று மேற்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறைக்கு ஈடாக 2021 செப்டம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (11.09.2021) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)ன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 21.08.2021 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)
