» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் ரூ.2 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு

சனி 31, ஜூலை 2021 12:04:01 PM (IST)

குமரியில் ரூ.2 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தைைய அதிகாரிகள் மீட்டனர்.

குமரி மாவட்டத்தில் செண்பகராமன்புதூர், ஆதிச்சன்புதூர் காலனியை சேர்ந்தவர் வசந்தகுமார் (30). இவருக்கும் 17 வயதுடைய சிறுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இதனால், அந்த சிறுமி கர்ப்பமானார். அவருக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.இந்த விவகாரம் தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வசந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

அதன்பின்பு அந்த சிறுமி தனது குழந்தையுடன் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த குழந்தையை கருங்கல் அருகே பாலப்பள்ளம், ெநட்டாவிளைைய சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்தனர். குழந்தையை வாங்கிய 3-வது மாதத்தில் பால்ராஜின் மனைவி அருள் சகாயமேரி இறந்தார். இதையடுத்து அந்த குழந்தையை அருள்சகாய மேரியின் தங்கை கோணத்தை சேர்ந்த ஜான்சி பராமரித்து வந்தார்.   

இந்தநிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த வசந்தகுமார் தனது குழந்தையை மீட்குமாறு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலுவலரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவின் அடிப்படையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து கோணம் பகுதிக்கு சென்று ஜான்சியுடன் தங்கியிருந்த குழந்தையை மீட்டு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர், குழந்தையின் தாயையும் அவரது உறவினர்களையும் வரவழைத்து அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நடுக்கடலில் படகு கவிழ்ந்து 23 மீனவர்கள் காயம்

வியாழன் 23, செப்டம்பர் 2021 11:37:13 AM (IST)

Sponsored AdsThoothukudi Business Directory