» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சலூன் கடைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் : முடிதிருத்துவோர் சங்கம் கோரிக்கை!

வெள்ளி 30, ஜூலை 2021 9:38:31 PM (IST)

சலூன் கடைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் . என முடிதிருத்துவோர் தூத்துக்குடியில் மாவட்ட சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது. 

தூத்துக்குடியில் மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்க பேரவை கூட்டம் நடந்தது. சங்க துணைத் தலைவர் சதாசிவம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் பொன்ராஜ், துணை செயலாளர் டென்சிங் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் பெருமாள், பொதுச் செயலாளர் நாகராஜ், பொருளாளர் மகராஜன், துணை செயலாளர்கள் கருணாமூர்த்தி, சரவணன், மாடசாமி, வேல்முருகன், கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணமும், இலவச ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தேவையான பொருட்களை நலவாரியத்தில் இருந்து வழங்க வேண்டும், வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், சலூன் கடைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். வங்கி, கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து உள்ள நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



மக்கள் கருத்து

அட அவன்Jul 31, 2021 - 11:01:12 AM | Posted IP 162.1*****

என்னடா சொல்ரீங்க?? வழுக்கை மண்டைக்கு 150 ரூபாய் வாங்குறாங்க ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory