» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நள்ளிரவில் உல்லாசத்தில் ஈடுபட்ட மனைவி, கள்ளக் காதலனுக்கு அரிவாள் வெட்டு : டிரைவர் கைது!

வெள்ளி 30, ஜூலை 2021 11:44:37 AM (IST)

குமரி அருகே நள்ளிரவில் உல்லாசத்தில் ஈடுபட்ட கள்ளக்காதலன், மனைவியை அரிவாளால் வெட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி அருகே தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் (36). அவருடைய மனைவி ஸ்ரீமதி (30). இவர்களுக்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ஸ்ரீமதிக்கும், அதே ஊரைச் சேர்ந்த செல்வன் (34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. இதனை அரசல், புரசலாக அறிந்த அய்யம்பெருமாள், மனைவி ஸ்ரீமதியை கண்டித்துள்ளார். 

மேலும் இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் அய்யம்பெருமாள் தூங்கி கொண்டிருந்தபோது மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஸ்ரீமதி கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து அவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் சத்தம் கேட்டு கண்விழித்த அய்யம்பெருமாள், தன்னுடைய மனைவியின் அறைக்கு சென்று பார்த்தார்.

அங்கு மனைவியுடன் செல்வன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்த அய்யம்பெருமாளுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஸ்ரீமதி, செல்வன் ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த 2 பேரும் உயிருக்காக போராடினர்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரி போலீசார் உதவியுடன் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யம்பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நடுக்கடலில் படகு கவிழ்ந்து 23 மீனவர்கள் காயம்

வியாழன் 23, செப்டம்பர் 2021 11:37:13 AM (IST)

Sponsored AdsThoothukudi Business Directory