» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு பா.ஜ.க துணை நிற்கும்: நயினார் நாகேந்திரன்

வியாழன் 29, ஜூலை 2021 11:18:00 AM (IST)

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு பா.ஜ.க துணை நிற்கும் என மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் பா.ஜ.க துணை தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நீட் விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.  தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதல் பெற்று ரத்து செய்தால் பா.ஜ.க. எதிர்க்கப்போவதில்லை. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு துணை நிற்போம். இந்த திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம். தமிழக மக்களின் நலனை ஒரு போதும் விட்டு தரமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நடுக்கடலில் படகு கவிழ்ந்து 23 மீனவர்கள் காயம்

வியாழன் 23, செப்டம்பர் 2021 11:37:13 AM (IST)

Sponsored AdsThoothukudi Business Directory