» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை ஆக.2ம் தேதி தொடங்குகிறது
செவ்வாய் 27, ஜூலை 2021 11:55:56 AM (IST)
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை வருகிற 2-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 12-ம் தேதி வரை நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை வருகிற 2-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 12-ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தினமும் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், காலை 6 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை, 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு களப அபிஷேகம், 11 மணிக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.
தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜை, பின்னர் அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

adminJul 27, 2021 - 04:15:28 PM | Posted IP 103.1*****