» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஐ.ஓ.பி.யை தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!

செவ்வாய் 22, ஜூன் 2021 11:09:52 AM (IST)

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியை தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கடந்த 1937இல் தொடங்கப்பட்டு தமிழகத்தின் முன்னோடி வங்கியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் சுமாா் 1,500 கிளைகள் மற்றும் மண்டல அலுவலகங்கள் உள்ளன. பயிா்க் கடன் கிராமப்புற விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் நகைக் கடன், மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு ஊதியம் போன்றவற்றை வழங்கி வருகிறது. 

தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஊராட்சி அலுவலகங்களின் கணக்கு ஐ.ஓ.பி.வங்கியில்தான் உள்ளன. இந்நிலையில், 2 பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்க வேண்டும் என்று மக்களவையில் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தபின்னா் நிதி அமைச்சா் ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியும் ஒன்றாக உள்ளது தமிழக மக்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே இந்தியன் ஓவா்சீஸ் வங்கியை தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory