» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்டெர்லைட் ஆலையில் 69.22 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி - ஆட்சியர் தகவல்

ஞாயிறு 20, ஜூன் 2021 9:39:24 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று மாலை 6.00 மணி நிலவரப்படி 69.22 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனும்,  588 NM3 (84 உருளை) வாயு ஆக்சிஜனும் உற்பத்தி செய்யப்பட்டது.

இத தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்ஸிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி துவங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இன்று (20.06.2021) மாலை 6.00 மணி நிலவரப்படி 69.22 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் மற்றும் 588 NM3 (84 உருளை) உற்பத்தி செய்யப்பட்டு, 49 உருளை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 7 மெட்ரிக் டன்  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும்,  4.22மெட்ரிக் டன் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 4.22மெட்ரிக் டன்  திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 10.94மெட்ரிக் டன்  மதுரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும்,

1.75 மெட்ரிக் டன் தென்காசி  அரசு மருத்துவமனைக்கும், 11.31 மெட்ரிக் டன் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 8 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 8.04மெட்ரிக் டன்  கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 35 உருளைகள் தென்காசி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 4.58மெட்ரிக் டன்  திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கும்,  4.58மெட்ரிக் டன்  கருர்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 4.58மெட்ரிக் டன்  நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ப. சுகுமார்Jun 21, 2021 - 04:41:07 AM | Posted IP 173.2*****

நல்ல செய்தி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory