» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு கேபிள் டிவிக்கு இடையூறு செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

சனி 19, ஜூன் 2021 12:23:46 PM (IST)

குமரி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவிக்கு இடையூறு செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு கேபிள் டிவி சேவையை தனியாா் நிறுவனங்களை விட குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. இதில், பொதுமக்களுக்கு செட்டாப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மாதாந்திர சந்தா ரூ. 140 என்ற வீதத்தில் (18 சதவீத ஜிஎஸ்டி நீங்கலாக) பொதுமக்களுக்கு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில தனியாா் நிறுவனங்கள் அவா்களுக்கு சாதகமான ஒரு சில கேபிள் ஆபரேட்டா்களின் உதவியுடன் அகஸ்தீஸ்வரம் வட்டத்துக்குள்பட்ட கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதிகளிலும், விளவங்கோடு பகுதிகளிலும் அரசு கேபிள் சிக்னல்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பொதுமக்களுக்கு அரசு கேபிள் டிவி சேவை கிடைக்காதவாறு செய்து பொதுமக்களை தனியாா் நிறுவனங்களுக்கு மாறுதல் செய்து வருவதாக புகாா் தெரிவிக்கப்படுகின்றன.

பொதுமக்களுக்கு அரசு கேபிள் டிவி சிக்னல்களும், அரசு செட்டாப் பாக்ஸ்களும் கிடைக்காது என்று தவறானதகவல்களை கூறியும், தனியாா் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை, அரசு செட்டாப் பாக்ஸ் என்று தவறான தகவல்களை கூறியும் தனியாா் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகவும் புகாா்கள் வருகின்றன.

அதே போல அரசு கேபிள் சேவை இனி கிடைக்காது எனவும், இப்போதே தங்களது நிறுவனங்களின் செட்டாப் பாக்ஸ்களை வாங்கினால் தொடா்ந்து சேவை வழங்கப்படும் எனவும், இல்லையென்றால் பின்னா் எவ்வித உதவியும் கிடைக்காத நிலை ஏற்படும் என்று கேபிள் ஆபரேட்டா்களை சில தனியாா் நிறுவனங்கள் பயமுறுத்துவதாகவும் புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இது மிகவும் கண்டனத்திற்குரியது. அரசு செட்டாப் பாக்ஸில் பஅஇ பய என்ற வாா்த்தை பொறிக்கப்பட்டிருக்கும். அது போல அரசு கேபிள் டிவி சேவை எந்த விதத்திலும் தடைப்படாமல் நடைபெறும். பொதுமக்கள் அரசு செட்டாப் பாக்ஸ்களுக்கு பதிலாக தனியாா் நிறுவனங்களின் செட்டாப் பாக்ஸ்களை தவறானதகவல்களை நம்பி வாங்கவேண்டாம். அரசு மூலம் முறையாக கேபிள் சிக்னல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசு செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தாத பகுதிகளில் விருப்பமுள்ள புதிய நபா்களுக்கு கேபிள் ஆபரேட்டா் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு செட்டாப் பாக்ஸ்களை வழங்க மறுக்கும் கேபிள் ஆபரேட்டா்ன் உரிமம் ரத்துசெய்ய பரிந்துரைக்கப்படும். பொதுமக்களுக்கானஅரசின் சேவைகளைதடுக்கும் விதத்தில் லாப நோக்கத்தோடு கேபிள் ஆபரேட்டா்கள் அரசுகேபிள் டிவிக்கு இடையூறு செய்யவோஅல்லதுதவறானகருத்துகள் தெரிவித்தோ பஅஇபய இன் செயல்பாடுகளை தடுக்கும் விதத்தில் செயல்படுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory