» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்டெர்லைட் ஆலையில் 47.06 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி : ஆட்சியர் தகவல்

வெள்ளி 18, ஜூன் 2021 8:21:49 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 47.06 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் மற்றும் 43 உருளை வாயு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்ஸிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி துவங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை 6.00 மணி நிலவரப்படி 47.06 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் மற்றும் 301 NM3 (43 உருளை) உற்பத்தி செய்யப்பட்டது. 

இதில், 7.99 மெட்ரிக் டன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கும், 7.99 மெட்ரிக் டன்  நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கும், 7.79 மெட்ரிக் டன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கும், 7.79 மெட்ரிக் டன் திருச்சி அரசு மருத்துவமனைக்கும், 5.17 மெட்ரிக் டன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி,மருத்துவமனைக்கும், 5.17 மெட்ரிக் டன் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும், 5.1 மெட்ரிக் டன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கும், 43 உருளை ஆக்சிஜன் தென்காசி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

K.ganeshan . secretary, Thoothukudi makkal vazhvathara pathukappu sangam.Jun 18, 2021 - 09:41:30 PM | Posted IP 108.1*****

Thanks to Sterlite for saving the lives of thousands of people . God bless Sterlite.🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory