» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை : நாகர்கோவிலில் பரபரப்பு

வியாழன் 17, ஜூன் 2021 10:36:56 AM (IST)



நாகர்கோவிலில் தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

குமரி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், நாகர்கோவில் கார்மல் பள்ளி மையத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். ஆனால் அவர்களில் முதலில் வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் வந்த பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி டோக்கன் வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் திடீரென பள்ளியின் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். அதில் ஒருவா் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.இதுபற்றி தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் உடன்பாடு ஏற்படவில்லை. மாறாக போலீசாரு டன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேசினர். கார்மல் பள்ளிக்கு ஏற்கனவே 500 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து கூடுதலாக 100 தடுப்பூசிகளை வரவழைத்து பொதுமக்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பிறகு போலீசாருடன் வாக்குவாதம் ெசய்த பொதுமக்கள் டோக்கன் வாங்கி கொண்டு வரிசைக்கு சென்றனர். இதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டு இருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. இதேபோல மாவட்டம் முழுவதும் சில தடுப்பூசி மையங்களில் பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory