» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மதுரை கோட்டத்தில் தற்போது இயக்கப்படும் ரயில்கள் : தெற்கு ரயில்வே தகவல்

புதன் 16, ஜூன் 2021 10:14:55 PM (IST)

கரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் 2020ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு ரயில்கள் சூழ்நிலைக்கேற்ப  அவ்வப்போது முழுமையாக பகுதியாக ரத்து செய்யப்பட்டு வந்தன. 

தற்போது ஜூன் 16 முதல் பயணிகளின் வசதிக்காக வண்டி எண்  02613/02614 சென்னை - மதுரை - சென்னை  தேஜாஸ்  சிறப்பு ரயில், வண்டி எண் 02627/02628 திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி சிறப்பு ரயில், வண்டி எண் 06105/06106 சென்னை - திருச்செந்தூர் - சென்னை செந்தூர் சிறப்பு ரயில், வண்டி எண் 06791/06792 திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி சிறப்பு ரயில், வண்டி எண் 02205/02206  சென்னை ராமேஸ்வரம் சென்னை சிறப்பு ரயில், வண்டி எண் 02635/02636 சென்னை - மதுரை - சென்னை வைகை சிறப்பு ரயில்,  வண்டி எண் 02605/02606 சென்னை - காரைக்குடி - சென்னை பல்லவன் சிறப்பு ரயில், 

வண்டி எண் 06617/06618 ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில், வண்டி எண் 06723/06724  சென்னை - கொல்லம் - சென்னை அனந்தபுரி சிறப்பு ரயில், வண்டி எண் 06733/06734 ராமேஸ்வரம் - ஓகா - ராமேஸ்வரம் சிறப்பு ரயில், வண்டி எண் 06787/06788 திருநெல்வேலி - ஜம்மு மாதா வைஷ்ணவி தேவி கட்ரா - திருநெல்வேலி சிறப்பு ரயில், வண்டி எண் 06351/06352 நாகர்கோவில் - மும்பை சிஎஸ்டி - நாகர்கோவில் சிறப்பு ரயில், வண்டி எண் 06340/06339 நாகர்கோவில் - மும்பை சிஎஸ்டி - நாகர்கோவில் சிறப்பு ரயில், 

வண்டி எண் 06181/06182 சென்னை - செங்கோட்டை - சென்னை சிலம்பு சிறப்பு ரயில், வண்டி எண் 06155/06156 மதுரை - டெல்லி நிஜாமுதீன் - மதுரை சிறப்பு ரயில், வண்டி எண் 06127/06128 சென்னை - குருவாயூர் - சென்னை சிறப்பு ரயில், வண்டி எண் 06069/06070 பிலாஸ்பூர் - திருநெல்வேலி - பிலாஸ்பூர் சிறப்பு ரயில், வண்டி எண் 06071/06072 மும்பை தாதர் - திருநெல்வேலி - மும்பை தாதர் சிறப்பு ரயில், வண்டி எண் 02693/02694 சென்னை - தூத்துக்குடி - சென்னை முத்துநகர் சிறப்பு ரயில், 

வண்டி எண் 06053/06054 மதுரை - பிகானேர் - மதுரை சிறப்பு ரயில், வண்டி எண் 02665/02666 ஹௌரா - கன்னியாகுமரி - ஹௌரா சிறப்பு ரயில், வண்டி எண் 02661/02662 சென்னை - செங்கோட்டை - சென்னை பொதிகை சிறப்பு ரயில், வண்டி எண் 02631/02632 சென்னை - திருநெல்வேலி - சென்னை நெல்லை சிறப்பு ரயில், வண்டி எண் 02633/02634  சென்னை - கன்னியாகுமரி - சென்னை சிறப்பு ரயில், வண்டி எண் 02637/02638 சென்னை - மதுரை - சென்னை பாண்டியன் சிறப்பு ரயில் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் வண்டி எண் 06321/06322 நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில், வண்டி எண் 06327/06328 புனலூர் - குருவாயூர் - புனலூர் சிறப்பு ரயில், வண்டி எண் 06849/06850 திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி சிறப்பு ரயில், வண்டி எண் 06867/06868 மதுரை - விழுப்புரம் - மதுரை சிறப்பு ரயில் ஆகியவையும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக கேரள மாநிலங்களில் தெற்கு ரயில்வே தற்பொழுது 376 சிறப்பு ரயில்களை இயக்கிக் கொண்டிருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory