» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

லாரி உரிமையாளரிடம் ரூ.5லட்சம் மோசடி : டிரைவர் கைது

செவ்வாய் 18, மே 2021 8:02:07 PM (IST)



கயத்தாறில் லாரி உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த டிரைவரை போலீசார் கைது செய்து பணத்தை மீட்டனர். 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த ராமசாமி மகன் மோகன் (60) என்பவர் லாரி செட் வைத்துள்ளார். இவரிடம் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு திருமங்கலக் குறிச்சியைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துப்பாண்டி (54) என்பவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். முத்துப்பாண்டி கடந்த 28.04.2021 அன்று கோவாவிலிருந்து மின்விசிறி (Crompton Fan) லோடு ஏற்றி வந்து மதுரைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மோகனின் நண்பர் சக்திவேல் பணம் ரூபாய் 5 லட்சத்தை மோகனிடம் கொடுக்குமாறு, லாரி டிரைவர் முத்துப்பாண்டியிடம் கொடுத்துள்ளார்.

அவரும் பணத்தை ஒப்படைப்பதாக கூறி பெற்றுக் கொண்டு வந்தவர், பணத்தை மோகனிடம் கொடுக்காமல், லாரியை மதுரையில் விட்டு, விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து பணத்தை கேட்பதற்காக மோகன் திருமங்கலக்குறிச்சியில் உள்ள முத்துப்பாண்டி வீட்டிற்கு சென்று கேட்ட போது, அவரை அவதூறான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய காவல் ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர் அரிகண்ணன், தலைமைக் காவலர் ஆறுமுகசங்கர், காவலர்கள் பாலமுருகன் மற்றும் அழகுமுத்துப் பாண்டியன் ஆகியோர் தப்பியோடிய முத்துப்பாண்டியை கயத்தாறு கட்டபொம்மன் மணிமண்டபம் அருகே கைது செய்து, அவரிடமிருந்த பணம் ரூபாய். 5 லட்சத்தையும் மீட்டனர். 

பணத்தை மோசடி செய்த முத்துப்பாண்டியை கைது செய்து, அவரிடமிருந்து ரூபாய் 5 லட்சத்தை மீட்ட கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.


மக்கள் கருத்து

adminமே 18, 2021 - 08:59:01 PM | Posted IP 108.1*****

muthupandi kottai :D

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory