» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் நீதிமன்றத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் : முதல்வரிடம் கோரிக்கை

செவ்வாய் 18, மே 2021 12:50:47 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தினையும், நீதிபதிகளின் குடியிருப்பினையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பா சமூகநீதிக்கான வழக்கறிஞர்களின் பேரவை, அமைப்பாளர் இ.அதிசயகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது : "தூத்துக்குடி மாவட்டமானது, 1 நாடாளுமன்ற தொகுதியாகவும், 6 சட்டமன்ற தொகுதியாகவும், தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திக்குளம் ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், திருவைகுண்டம், ஏரல், எட்டையாபுரம், கயத்தாறு ஆகிய 9 தாலுகாக்களையும் கொண்ட மாவட்டமாகும். . இங்கு ஆண்கள் 8 லட்சத்து 70 ஆயிரமும், பெண்கள் 8 லட்சத்து 80 ஆயிரமும் என சுமார் 17 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் தொகையினை கொண்ட மாவட்டமாகும். 

இந்த 6 சட்டமன்ற தொகுதியிலும் அந்தந்த தொகுதிகளில் அரசு மருத்துவமனைகளும் மாவட்டத்திலுள்ள 12 ஒன்றியங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. மேற்படி மருத்துவமனைகளுக்கு எல்லாம் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. மேற்படி மருத்துவ கல்லூரியில் இளநிலை மாணவர்கள், பயிற்சி மருத்துவ மாணவர்கள், செவிலிய மாணவர்கள் மற்றும் உடன் சார்ந்த பயிற்சி மாணவர்கள் என ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவ கல்வி பயின்று வருகின்றார்கள்.

மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் அவசர தேவைக்காக மருத்துவமனை வளாகத்திலே உள்ள குடியிருப்புகள், விடுதிகளில் தங்கி தங்களது பணியை செய்து வருகின்றார்கள். மேற்படி மருத்துவமனைக்கு தினசரி ஆயிரக்கணக்கான உள்நோயாளிகளும், வெளிநோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். தற்போது நிலவி வரும் கொரோனா நோய்தொற்றின் அசாதாரண சூழ்நிலையில் மருத்துவமனை முழுவதும் மகப்பேறு வார்டினை தவிர அனைத்து வார்டுகளும் கொரோனா வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த இடம் போதுமானதாக இல்லை. 

மேற்படி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையினை வளாகத்தினை ஒட்டியே தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றமும், நீதிபதிகள் குடியிருப்பும் இருந்து வருகின்றது. இந்த நீதிமன்ற வளாகத்தினையும், நீதிபதிகள் குடியிருப்பினையும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு மாவட்ட நீதிமன்றத்திற்கும், நீதிபதிகள் குடியிருப்பிற்கும் தூத்துக்குடியின் புறநகர் பகுதியில் இடம் தேர்வு செய்து அப்பகுதியில் அமைக்க வேண்டும். தற்போதுள்ள நீதிமன்ற பகுதியினை அரசு மருத்துவமனையின் கொரோனா நோய்தொற்று பிரிவிற்கு மட்டுமல்லாது நிரந்தரமாக மருத்துவமனை அமைத்து இம்மாவட்ட மக்களுக்கு உயர்தர மருத்துவம் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். 

இதனால் இம்மாவட்ட மக்கள் உயர் மருத்துவத்திற்கோ அல்லது சிறப்பு மருத்துவத்திற்கோ வெளிமாவட்டங்களுக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர் தற்போதுள்ள தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தினையும், நீதிபதிகளின் குடியிருப்பினையும், மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கையகப்படுத்தி கொண்டு புறநகர் பகுதியில் நீதிமன்றத்திற்கு இடம் தேர்வு செய்து நீதிமன்றத்தினை தூத்துக்குடி புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல திட்டம் வகுத்திட வேண்டும் படி சமூ நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் பணிவோடு கேட்டுக்கொள்கின்றோம்" என கோரிக்கை விடுத்துள்ளார்.இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி, சட்டத்துறை அமைச்சர், உயர் நீதிமன்ற பதிவாளர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கும் மனு அனுப்பியுள்ளார். 


மக்கள் கருத்து

பாதாள சாக்கடை தான் காரணம்மே 19, 2021 - 08:37:14 AM | Posted IP 162.1*****

அங்கேயும் ஆஸ்பத்திரியாக மாற்றினால் அடிக்கடி மழைக்காலத்தில் மழைநீர் உள்ளே புகுந்து விடுகிறது , முதல்ல 3 வகையான பாதாள சாக்கடை பணிகளை உருப்படியாக முடிக்க சொல்லுங்க .. ஊரெல்லாம் சாக்கடைகளால் கொசுக்கள், நோய் உற்பத்தி ஆகிறது..

K.JOTHI NELLAI KUMARமே 18, 2021 - 01:52:42 PM | Posted IP 162.1*****

WELL SAID OUTER AREA NEAR COLLECTRATE IS THE BEST CHOICE.ANY WAY ,ALL FOR GOOD.MY TEGARDS TO ATHISAYAKUMAR FOR INITIATING THE GOOD MOVE.LOVE U ALL.TAKE CARE.BE SAFE.GOOD DAY.

Veeraமே 18, 2021 - 01:02:35 PM | Posted IP 108.1*****

நல்ல கருத்து

த‌. சண்முகசுந்தரம்மே 18, 2021 - 01:02:27 PM | Posted IP 108.1*****

நல்ல கருத்து வரவேற்கிறேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory