» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் வட்டாட்சியர் மரணம் - ஆட்சியர் அஞ்சலி

செவ்வாய் 18, மே 2021 10:12:54 AM (IST)



தூத்துக்குடியில் உடல் நலக்குறைவால் கேபிள் டிவி வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் என்பவர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் தங்கசீலன். (வயது 52). இவர் தூத்துக்குடி மாவட்ட அரசு கேபிள் டி.வி. வட்டாச்சியராக பணியாற்றி வந்தார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வட்டங்களில் வட்டாச்சியராக பணிபுரிந்துள்ளார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் காலை கோரம்பள்ளத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

 ஆட்சியர் அஞ்சலி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறையில் பணியாற்றி, உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த கேபிள் டிவி வட்டாட்சியர் ராஜ்குமார் தங்க சீலன் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

பத்திரிக்கையாளர் சங்கம் அஞ்சலி

ராஜ்குமார் தங்சீலன், தூத்துக்குடியில் மூத்த பத்திரிக்கையாளரும், வழக்கறிஞருமான காமராஜின் நெருங்கிய உறவினர் (அத்தான்) ஆவார். இந்நிலையில் ராஜ்குமார் தங்சீலன், மறைவுக்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

குமார்மே 19, 2021 - 07:17:30 PM | Posted IP 162.1*****

மிகவும் அன்போடு பழகுபவர்,ஆன்மா இலைப்பாரட்டும்

Sathishkumarமே 19, 2021 - 10:52:59 AM | Posted IP 162.1*****

RIP

M.iyyappanமே 19, 2021 - 06:45:02 AM | Posted IP 162.1*****

Nalla manithar

saranமே 18, 2021 - 08:27:55 PM | Posted IP 162.1*****

RIP

K.Gopalakrishnaமே 18, 2021 - 11:58:25 AM | Posted IP 162.1*****

இவருடன் ஒரு சில நாட்கள் நான் பணியாற்றினேன் நல்ல மாமனிதர் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory