» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சூறைக்காற்றுடன் மழை: வீடு இடிந்து 2 வயது பெண் குழந்தை பலி - குமரியில் சோகம்

ஞாயிறு 16, மே 2021 10:23:53 AM (IST)



குமரியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் பெய்த மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடு இடிந்து 2 வயது பெண் குழந்தை பலியானது.

குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே ராமன்துறை பகுதியை சேர்ந்தவர் டயானா பெக்மீர் (42). மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு மைக்கிள் ராஜா (6), ஆரோக்கிய ரக்‌ஷன் (5) என்ற 2 மகன்களும், ரெஜினா என்ற 2 வயது மகளும் உள்ளனர். இவர்கள் வசிக்கும் வீடு கடற்கரையை ஒட்டி உள்ளது. மேலும் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகளால் கட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு டயானா பெக்மீர் அந்த வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இந்தநிலையில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேரும் காயம் அடைந்தனர். மேலும் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். படுகாயமடைந்த குழந்தை ரெஜினாவை சிகிச்ைசக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சூறைக்காற்றில் வீடு இடிந்து விழுந்து குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. குமரியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. குளச்சலில் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.


மக்கள் கருத்து

adminமே 17, 2021 - 09:21:16 AM | Posted IP 46.16*****

athu raman thurai illa boss

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory