» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் 5½ லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரணம் வழங்கும் பணி துவக்கம்

ஞாயிறு 16, மே 2021 10:20:45 AM (IST)

குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 51 ஆயிரத்து 258 குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் மனோதங்கராஜ் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கரோனா நிவாரண நிதி வழங்கும் பணி நேற்று தொடங்கியது. குமரி மாவட்டத்திலும் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் நிவாரண நிதி வழங்கப்பட்டது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இதற்கான தொடக்க விழாவுக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். நிவாரண நிதி வினியோகத்தை அமைச்சர் மனோதங்கராஜ் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:- தமிழகத்தில் கரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கு குமரி மாவட்ட மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிவாரணம் வழங்க வேண்டும். தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போவதால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவது சவாலாக உள்ளது.

தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் தேவை இருக்கிறது. எனினும் எந்த வகையிலாவது ஆக்சிஜன் வினியோகத்தை அதிகரிக்க முயற்சி எடுத்து வருகிறோம். நோய் பாதிப்பை கட்டுப்படுத்த மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறுகையில், "குமரி மாவட்டத்தில் 776 ரேஷன் கடைகள் மூலமாக கரோனா நிவாரண நிதி வழங்கப்படுகிறது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 546 குடும்பங்களுக்கும், தோவாளை தாலுகாவில் 37 ஆயிரத்து 289 குடும்பங்களுக்கும், கல்குளம் தாலுகாவில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 833 குடும்பங்களுக்கும், திருவட்டார் தாலுகாவில் 52 ஆயிரத்து 834 குடும்பங்களுக்கும், விளவங்கோடு தாலுகாவில் 85 ஆயிரத்து 502 குடும்பங்களுக்கும், கிள்ளியூர் தாலுகாவில் 88 ஆயிரத்து 294 குடும்பங்களுக்கும் என மொத்தம் 5 லட்சத்து 51 ஆயிரத்து 298 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்படுகிறது. 

அந்த வகையில் குமரி மாவட்டத்தில் மொத்தம் ரூ.110 கோடியே 26 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்பட உள்ளது. நிவாரண நிதியை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றார். விழாவில் விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி, மாவட்ட வழங்கல் அதிகாரி சொர்ணராஜ், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுப்பையா, துணை பதிவாளர்கள் சங்கரன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

adminமே 16, 2021 - 10:23:37 AM | Posted IP 46.16*****

டாஸ்மாக்கை மூடிட்டு இதை கொடுத்து இருப்பது அரசின் நல்ல எண்ணத்தை காட்டுகிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory