» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறைக்கு சீல்வைப்பு ஆட்சியர் மா.அரவிந்த், தகவல்

புதன் 7, ஏப்ரல் 2021 5:15:04 PM (IST)கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்களை, பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, முத்திரையிடப்பட்டதுஎன மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் ஆறு சட்டமன்ற தொகுதிகளான கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகியவற்றிற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக அந்தந்த தொகுதிக்கு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள் அருகாமையிலுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கோணம் பொறியியல் கல்லூரியின் கீழ் தளத்தில் கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பாராளுமன்றம் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமும், முதல் தளத்தில், நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமும், இரண்டாம் தளத்தின் வலது பக்கம் குளச்சல் தொகுதிக்குட்பட்ட பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமும், இடது பக்கம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமும், கீழ் தளத்தின் கீழுள்ள தளத்தில் பத்மநாபபுரம் மற்றும் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பாராளுமன்றம் தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களின் அருகாமையில், வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியின் முதல் தளத்தில், பத்மநாபபுரம் மற்றும் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமும், வாக்கு எண்ணும் மையங்களின் அருகாமையில், வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, 06.04.2021 அன்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு, அந்தந்த தொகுதிக்குட்பட்ட பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டது.

அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன், முன்னிலையிலும், கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிளுக்கான பொதுப்பார்வையாளர்கள் அக்ஷய் சூட், கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு தர்மேந்திர சிங், கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு ஆஷிஷ் குமார், கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு ஜாண் திளங்டின்குமா, கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு போஸ்கர் விலாஸ் சந்தீபன், கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு பி.எஸ்.ரெட்டி, ஆகியோர் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி காவல் பார்வையாளர் ஜகி அகமது, இ.கா.ப., ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய சட்டமன்ற தொகுதி மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறைகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தலைமையில், அந்தந்த சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில், அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இன்று (07.04.2021) முத்திரை வைத்தார்கள்.

நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐ.எஸ்.மெர்சி ரம்யா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எம்.சிவகுரு பிரபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மா.வீராசாமி (பொது), சாந்தி (தேர்தல்), சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சு.சொர்ணராஜ் (கன்னியாகுமரி), ஆர்.நாகராஜன் (குளச்சல்), த.மாதவன் (விளவங்கோடு), எம்.சங்கரலிங்கம் (கிள்ளியூர்), வட்டாட்சியர்கள் ஜீலியன் ஜீவர் (தோவாளை), சுசீலா (அகஸ்தீஸ்வரம்), ஜெகதா (கல்குளம்), புரந்தரதாஸ் (விளவங்கோடு), ராஜாசேகர் (கிள்ளியூர்), அஜிதா (திருவட்டார்), தேர்தல் வட்டாட்சியர் சேகர் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory