» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது- பொன். ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 6, ஏப்ரல் 2021 5:19:22 PM (IST)

தமிழகத்தில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களிப்பதை பார்க்கும்போது மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது தெரிவதக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் எஸ்.எல்.பி. பெண்கள் பள்ளியில் வாக்காளர்களுடன் வரிசையில் காத்து நின்று தனது வாக்கை பதிவு செய்தார். 

பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள். எந்த ஒரு சங்கடமும் சிரமமுமின்றி வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது மிகப்பெரிய எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆர்வமாக வந்து வாக்களிப்பதை வைத்து பார்க்கும்போது 75 சதவீத வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.


மக்கள் கருத்து

அசோக்Apr 8, 2021 - 10:45:34 AM | Posted IP 162.1*****

இவர் வாயை திறந்தால் பொய்கள் தான் வரும், ஆனால் உண்மை வெளிவராது... மூஞ்சை பார்த்தாலே தெரியும் பெரிய புளுகு மூட்டை பொறி உருண்டை ..

AnbuApr 8, 2021 - 12:13:04 AM | Posted IP 108.1*****

உனக்கு ஆப்புதான்.

sulochApr 7, 2021 - 11:16:00 AM | Posted IP 162.1*****

நீர் இந்த தேர்தலோடு அவுட் ஒய். பச்சை தமிழின துரோகி. கன்னியாகுமாரி மாவட்ட வளங்களை வெளிமாநில தொழில் அதிபர்களுக்கு விற்கும் ஏஜென்ட்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory