» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் ஜனநாயக கடமையாற்ற படகில் வந்த பழங்குடி இன மக்கள்

செவ்வாய் 6, ஏப்ரல் 2021 3:39:26 PM (IST)குமரியில் ஜனநாயக கடமையாற்றுவதற்காக  மலைகிராமங்களில் இருந்து பழங்குடி இன மக்கள் படகில் வந்து வாக்களித்தனர். 

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தடில் காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை மலை பகுதியில் விளமலை, முடவன் பெற்றா, தச்சமலை, புன்ன முட்டதேரி, களப்பாறா, நடனம்பொற்றா, மறாமலை, தோட்டமலை பகுதிகள் உள்ளன. இங்கு 800-க்கும் மேற்பட்ட பழங்குடியின வாக்காளர்கள் உள்ளனர்.இவர்களுக்கான வாக்கு சாவடி பேச்சிப்பாறையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் உண்டு உறைவிட மேல் நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இவர்கள் வாக்களிக்க பேச்சிப்பாறை அணையை கடந்து வர வேண்டும். 

இதற்காக அவர்கள் படகில் 15 நிமிடம் பயணம் செய்து பேச்சிப்பாறை வாக்கு சாவடிக்கு சென்றனர். படகுத்துறைக்கும், வாக்குசாவடிக்கும் அரை கிலோ மீட்டர் தூரம் உள்ளது.ஜனநாயக கடமையாற்ற இவர்கள் படகில் பயணம் செய்தும், நடந்தும் வந்து வாக்குகளை பதிவு செய்தனர். உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் வசித்த பகுதிகளிலேயே வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது பேச்சிப்பாறையில் அமைக்கப்பட்டதால் அவர்கள் படகில் வந்து வாக்களிக்க வேண்டியது இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory