» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் தேர்தல் புறக்கணிப்பு : தூத்துக்குடியில் பரபரப்பு

செவ்வாய் 6, ஏப்ரல் 2021 11:17:10 AM (IST)தூத்துக்குடியில் அதிகாரிகளைக் கண்டித்து ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீளவிட்டான், ராஜீவ் நகர், பாக்கியலட்சுமி நகர் பகுதிகளில  244 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 1997 முதல் மீளவிட்டான் பஞ்சாயத்திலும், பின்னர் தூத்துக்குடி மாநநகராட்சியிலும் வீட்டுத் தீர்வை, மின்கட்டணம், தண்ணீர் வரி செலுத்தி வருகின்றனர். குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 

ஆனால் அவர்களுக்கு பட்டா வழங்காமல் அதிகாரிகள் அழைக்கழித்து வருவதாக குற்றம்சாட்டி ராஜீவ் நகர், பாக்கியலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் ரமேஷ்குமார், செயலாளர் எட்வின் ராஜா, பொருளாளர் குரூஸ் அந்தோணி ஆகியோர் தலைமையில் ராஜீவ் நகரில் உள்ள மண்டபத்தில் 1350பேர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடத்தும் மக்களுக்கு உணவு சமைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களின் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

ராஜீவ் நகர் வாசிApr 6, 2021 - 01:12:50 PM | Posted IP 108.1*****

உயர் நீதிமன்றம் வரை சென்று வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற்றும் கூட அதிகாரிகளின் அலட்சியத்தால் பல வருடமாய் போராடும் அப்பாவி மக்கள்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory