» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்டத்தில தேர்தல் ஏற்பாடுகள் தயார் : ஆட்சியர் மா.அரவிந்த் அறிவிப்பு

திங்கள் 5, ஏப்ரல் 2021 5:33:30 PM (IST)

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல், 2021 மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப் பதிவு 06.04.2021 காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கிய கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்களும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்களும், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 12 வேட்பாளர்களும், பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 12 வேட்பாளர்களும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில்  15 வேட்பாளர்களும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 14 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 

போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் அடங்கிய சுவரொட்டி மற்றும் வாக்களிக்க தேவையான அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் பட்டியல் அந்தந்த வாக்கு சாவடிகளில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் மூலம் கீழ் குறிப்பிடும் ஆவணங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.வாக்காளர் அடையாள சீட்டு பெற்றிருந்தாலும் / பெறாவிட்டாலும் வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என இணையதளம்  மூலமாகவோ, வாக்காளர் உதவி மையம் மூலமாகவோ ஆய்வு செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள சீட்டு) / வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருந்தாலும் / பெறாவிட்டாலும் மேற்கண்ட ஆவணங்களின் மூலம் வாக்களிக்கலாம். 

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனித்தனியாக மின்னணு வாக்குப்பதிவு கருவி மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் வைக்கப்பட்டு வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஏஏPயுவு கருவி வைக்கப்பட்டுள்ளது. அதில் 7 வினாடிகளுக்கு பார்வை திரையில் காணலாம்.

வாக்காளர்கள் வாக்கு சாவடியினுள் அலைபேசி எடுத்து செல்ல அனுமதியில்லை. வாக்காளருடன் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை மட்டும் தங்களுடன் அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவர் மற்றும் பார்வை திறனற்ற வாக்காளர்கள் தங்கள் உதவிக்கு ஒரு நபரை அழைத்து செல்லலாம். வாக்காளர்களை தவிர தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட தகுந்த அனுமதி சீட்டு இல்லாமல் வேறு எவரும் வாக்கு சாவடிக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். 

வாக்கு சாவடிகளில் பணியில் இருக்கும் தேர்தல் முகவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கும். வாக்குச்சாவடி முகவர்கள் வாக்காளர்களை அடையாளம் காணும் பணியினை மட்டுமே செய்ய வேண்டும். எவ்வித இடையூறும் இல்லாது முழு சுதந்திரத்துடன் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையினை பயன்படுத்திடவும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்களுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வேட்பாளர்களின் முகாம்கள் வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டருக்குள் அமைக்கக் கூடாது. அங்கே சுவரொட்டிகள், கொடிகள் மற்றும் பிற தேர்தல் பிரச்சார கருவிகள் இடம் பெற்றிருக்க கூடாது.

முகாம்களில் உணவு விநியோகம் செய்யப்படுவதும், கூட்டம் கூடுவதும், பரப்புரை செய்வதும் அறவே கூடாது. தேர்தல் ஆணைய அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் அனுமதிக்கப்படும். 137 மண்டல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் 54 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 54 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான 288 வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1271 வாக்குச்சாவடிகளில் இணையவழியில் இந்திய தேர்தல் ஆணையம் நேரடியாக கண்காணிக்கும் வகையில் (றுநடி ளுவசநயஅiபெ) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

வேட்பாளர்கள் மூலம் வழங்கப்படும் உணவுகள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க கூடாது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதிகள் மற்றும் 631 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொரோனா நோய் பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக வாக்காளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்திடவும் கிருமி நாசினிகள் வழங்கிடவும் சுகாதாரத்துறை மூலம் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உயிரி மருத்துவ கழிவுகளை அகற்றிட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அதற்கென தனியாக 71 வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் வாக்களிக்கும் போது கையுறை வழங்கப்படும். 

வாக்களர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு வரும் போது முகக்கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வாக்குப்பதிவு முடிவுற்ற பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கோணம் அரசினர் பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory