» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை : சார் ஆட்சியர் விசாரணை!!

சனி 3, ஏப்ரல் 2021 10:29:57 AM (IST)

தூத்துக்குடி அருகே திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி மீராதேவி (27), இந்த தம்பதியருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மீராதேவிக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருமாம். அதற்கு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், அவருக்குள்ள நோயை குத்திக்காட்டி கணவரும், மாமியாரும் மீராதேவியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த மீராதேவி அதிகளவு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூத்து்ககுடி ரூரல் டிஎஸ்பி பொன்னரசு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சம்பவம் தொடர்டபாக தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

LEGALApr 5, 2021 - 03:26:56 PM | Posted IP 162.1*****

KINDLY TAKE LEGAL ACTION AT EARLIEST

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory