» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில்- கோவை திருச்சி, மதுரை- திருவனந்தபுரம் உள்ளிட்ட 5 ரயில்கள் ரத்து

புதன் 31, மார்ச் 2021 3:51:26 PM (IST)

மதுரை அருகே இரட்டை ரயில் பாதை பணி நடைபெறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 4 ரயில்களை பகுதியாக தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

மதுரை அருகே இரட்டை ரயில் பாதை பணி நடைபெறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை- திருநெல்வேலி, திருநெல்வேலி- சென்னை இரு மார்க்கத்திலும் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக 4 ரயில்களை பகுதியாக தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

1. ரயில் எண்: 02628, திருவனந்தபுரம்- திருச்சி சிறப்பு ரயில் இன்று முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

2. ரயில் எண்:02627, திருச்சி- திருவனந்தபுரம் சிறப்பு ரயில் இன்று கொடைக்கானல் ரோடு- திருவனந்தபுரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

3. ரயில் எண்: 06321/ 06322 நாகர்கோவில்- கோவை- நாகர்கோவில் சிறப்பு ரயில், திருநெல்வேலி- திண்டுக்கல்- திருநெல்வேலி இடையே இன்று பகுதி ரத்து செய்யப்படுகிறது.

4.ரயில் எண்: 06343 திருவனந்தபுரம்- மதுரை சிறப்பு ரயில், திண்டுக்கல்- மதுரை இடையே நேற்று ரத்து செய்யப்பட்டது.

5. ரயில் எண்: 06344 மதுரை- திருவனந்தபுரம் சிறப்பு ரயில், மதுரை- திண்டுக்கல் இடையே மட்டும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

6. ரயில் எண்: 06072 திருநெல்வேலி தாதர் சிறப்பு ரயில் இன்று திருவனந்தபுரம், ஷோரனூர் வழியாக மாற்றிவிடப்படுகிறது.

7. ரயில் எண்:06340 நாகர்கோவில்- மும்பை சிறப்பு ரயில் திருவனந்தபுரம்- ஷோரனூர் வழியாக இன்று திருப்பிவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory