» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் நாளை கமல்ஹாசன் பிரசாரம் : ஹெலிகாப்டர் மூலம் கொட்டாரம் வருகிறார்!!

செவ்வாய் 30, மார்ச் 2021 11:44:44 AM (IST)

கன்னியாகுமரியில் ம.நீ.ம.வேட்பாளர் பி.டி.செல்வகுமாரை ஆதரித்து கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை பிரசாரம் செய்கிறார். 

கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராக பி.டி.செல்வகுமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் கமல்ஹாசன் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொட்டாரம் பொட்டல்குளத்தில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் வந்திறங்குகிறார்.

அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.சர்ச் ரோடு சந்திப்பில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இந்த தகவலை கன்னியாகுமரி சட்டசபை தொகுதி வேட்பாளர் பி.டி. செல்வகுமார் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory