» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு : மேலும் 2பேர் உயிரிழப்பு

சனி 27, மார்ச் 2021 12:15:38 PM (IST)

குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 17,396 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று உயர்ந்து வருகிறது. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 331 ஆகும்.கடந்த சில நாட்களுக்கு முன் குஜராத் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சுற்றுலா வந்த பயணிகளில் 75 வயது மூதாட்டி ஒருவர் திடீரென இறந்தார். அவருக்கு ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. குமரியில் புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த 60 வயது ஆண் நேற்று பிற்பகலில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்ட பூமத்திவிளை தெங்கன்குழியைச் சேர்ந்த 77 வயது பெண்ணும் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 333 ஆக உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை தவறாமல் கடைப்பிடிக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனா். இதனிடையே தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 14 போ் குணமடைந்ததால் கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 16994 ஆக உயா்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 140 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory