» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மத்திய அரசுக்கு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்க்கிறார்கள் : குமரியில் நடிகர் செந்தில் பிரசாரம்!!
வியாழன் 25, மார்ச் 2021 5:03:33 PM (IST)
மத்திய அரசுக்கு எந்த நலத் திட்டங்களை கொண்டு வந்தாலும் சில கட்சியினர் வேண்டாம் என்று போராடி வருவதாக நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கன்னியாகுமரி எம்.ஆர்.காந்தி மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு ஆதரவாக நேற்று நடிகர் செந்தில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
பேச்சிப்பாறையிலிருந்து தொடங்கிய இந்தப் பிரசாரப் பயணம் கடம்பன்மூடு, மணியன்குழி, காக்கச்சல், திருநந்திக்கரை, தும்பகோடு, அண்ணாநகா், அரசமூடு, உண்ணியூா்கோணம், பிணந்தோடு, மாஞ்சக்கோணம், திற்பரப்பு, அரமன்னம், நாககோடு, குலசேகரம் சந்தை, செருப்பாலூா், மங்கலம், பொன்மனை, மலைவிளை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர் குமரி மாவட்டத்தில் கிடப்பில் கிடக்கும் இரட்டைப் வழிப்பாதையை மீண்டும் தொடங்கும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் சில கட்சிகள் மத்திய அரசு எந்த நல்ல திட்டத்தை கொண்டு வந்தாலும் வேண்டாமென தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தான் கட்சியின் பெயரையும் தலைவரின் பெயரையும் சொல்ல விரும்பவில்லை என்றும் அதனை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்றும் செந்தில் பேசினார்.
பேச்சிப்பாறை, குலசேகரம் பகுதிகளில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பத்மநாபபுரம் சட்டப் பேவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் டி. ஜான் தங்கம் ஆகியோரை ஆதரித்து நகைச்சுவை நடிகா் செந்தில் பிரசாரம் மேற்கொண்டாா்.
இந்த பிரசாரப் பயணத்தை தொடங்கிவைத்து பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம். வரும் 3 ஆண்டுகள் மக்களவைக்கு முக்கியமான ஆண்டுகள். பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இந்தத் திட்டங்கள் இம்மாவட்டத்துக்குக் கிடைக்க வேண்டும். இங்குள்ள இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். வேலை அளிப்பவா்களாகவும் இளைஞா்கள் மாற வேண்டும். எனவே, மக்கள் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் மழை நீடிப்பு- பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 3:49:18 PM (IST)

கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் : சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:13:09 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)

நகை பட்டறையில் 37½ பவுன், ரூ.1¼ லட்சம் கொள்ளை : மாயமான ஊழியருக்கு வலைவீச்சு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:01:14 AM (IST)

நாகா்கோவிலில் விபத்து: மருத்துவா், செவிலியா் பலி
வெள்ளி 9, ஏப்ரல் 2021 10:22:44 AM (IST)

குமரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறைக்கு சீல்வைப்பு ஆட்சியர் மா.அரவிந்த், தகவல்
புதன் 7, ஏப்ரல் 2021 5:15:04 PM (IST)
