» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தை குளிர்வித்த கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!!

புதன் 24, மார்ச் 2021 4:40:37 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பரவவலாக மழைபெய்ததால் கோடை வெப்பம் தனிந்து மக்கள் மகழ்ச்சி அடைந்தனர். 

கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை காற்றின் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வருகிற 27-ந்தேதி வரை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி இன்று அதிகாலையில் குமரி மாவட்டம் முழுவதும் திடீரென பலத்த மழை பெய்தது,

கொட்டாரம், மயிலாடி, பூதப்பாண்டி மற்றும் மேற்கு மாவட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது. இதுபோல நாகர்கோவில் நகர் முழுவதும் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல மேற்கு மாவட்டத்தில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை கொட்டியது. திடீர் மழை காரணமாக அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்றோர் அவதிக்கு ஆளானார்கள்.

குமரி மாவட்டத்தில் பெய்த திடீர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர் வரத்து சற்று உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 256 கன அடி தண்ணீர் வந்தது.அணையில் தற்போது 37.70 கன அடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து 123 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 522.31 அடியாக உள்ளது. சிற்றார் 1 அணையில் 5.61 அடியும், சிற்றார் 2 அணையில் 5.70 அடி தண்ணீரும் உள்ளது.

மாம்பழத்துறையாறு அணையில் 14.76 அடி தண்ணீர் உள்ளது. பொய்கை அணையில் 19 அடி தண்ணீர் உள்ளது. நாகர்கோவில் பகுதியில் 7.8 மி.மீ. மழை பெய்துள்ளது. பூதப்பாண்டியில் 1.2 மி.மீட்டரும், ஆரல்வாய்மொழியில் 2, கொட்டாரத்தில் 2.6, மாம்பழத்துறையாறில் 2.6 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பெய்த திடீர் மழை காரணமாக வெப்பம் சற்று குறைந்தது. ஆனால் காலை 7 மணிக்கு மேல் மாவட்டம் முழுவதும் மீண்டும் வெயில் அடிக்க தொடங்கியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory