» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கீடு

சனி 6, மார்ச் 2021 10:43:27 AM (IST)

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடைத்தோ்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் முன்னதாக பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடா்ந்து, தொகுதிப் பங்கீடு தொடா்பாக அதிமுக, பாஜக தலைவா்கள் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா். இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து இதற்கான ஒப்பந்தம் நேற்று இரவு கையெழுத்தானது. தற்போது பாஜகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடைத்தோ்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட தொகுதிப் பங்கீடு குறித்த அறிக்கை: தமிழகத்தில் வரும் ஏப்.6-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கத் தீா்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏப்.6-ஆம் தேதி நடைபெற உள்ள கன்னியாகுமரி மக்களவை இடைத் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு அதிமுக தனது முழு ஆதரவு அளிக்கும் என்றும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக, தமாகாவுடன் தொடா்ந்து பேச்சு: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, தமாகா ஆகிய இரு கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் தேமுதிக, தமாகாவுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படும் என்று அதிமுக தலைவா்கள் தெரிவித்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory