» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெல்லையில் அதிமுக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு : மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 23, பிப்ரவரி 2021 8:52:58 AM (IST)
நெல்லையில் பட்டப்பகலில் அ.தி.மு.க. பிரமுகரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை டவுன் வயல் தெருவைச் சேர்ந்தவர் முருகன் என்ற இந்திரா முருகன் (62). அ.தி.மு.க. பிரமுகரான இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் நெல்லை டவுன் குறுக்குத்துறை சாலையில் முருகன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மகும்பல் திடீரென்று முருகனை சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். முருகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, அ.தி.மு.க. பிரமுகரை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய மர்மகும்பலை சேர்ந்தவர்கள் யார்? எதற்காக அவரை வெட்டினார்கள்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். தப்பி ஓடிய அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழையாறு புதிய தடுப்பணைக்கு தடைகோரி வழக்கு: நகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 24, பிப்ரவரி 2021 5:19:57 PM (IST)

கழிவறைக்குள் 1 மணி நேரம் பரிதவித்த இளம்பெண் : நகராட்சி ஊழியரின் அலட்சியம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 8:32:53 PM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, பிப்ரவரி 2021 5:04:14 PM (IST)

திருச்செந்தூா் மாசித் திருவிழா: இரணியலிலிருந்து காவடி எடுத்துச்சென்ற பக்தா்கள்
வியாழன் 18, பிப்ரவரி 2021 4:59:02 PM (IST)

களியக்காவிளையில் ரூ. 1.5 கோடியில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் தீவிரம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 4:57:40 PM (IST)

மதுரை-கன்னியாகுமரி வரையிலான சுங்கச்சாவடிகள் மூட வாய்ப்பில்லை: மத்திய அரசு தகவல்
புதன் 17, பிப்ரவரி 2021 3:34:31 PM (IST)
