» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இரட்டை கொலை வழக்கில் கைதான 9 போலீசாரும் நீதிமன்றத்தில் ஆஜர்: விடுவிக்கக்கோரி எஸ்ஐ மனு
செவ்வாய் 23, பிப்ரவரி 2021 8:29:16 AM (IST)
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான 9 போலீசாரும் நேற்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்த இருவரும் இறந்தனர். இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர்கள் முத்துராஜ், முருகன், தாமஸ்பிரான்சிஸ் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய போலீசார் 10 பேரும் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா காரணமாக இறந்துவிட்டார். மீதம் உள்ள 9 பேரும் சிறையில் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஜாமீன் கேட்டு பலமுறை மனு தாக்கல் செய்தும், அவற்றை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி தாண்டவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் சிறையில் உள்ள 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை நடந்தது. பின்னர் இந்த வழக்கை வருகிற 1-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதற்கிடையே இந்த வழக்கில் கைதான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனுவும் மார்ச் 1-ந்தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
M.sundaramFeb 23, 2021 - 09:57:48 AM | Posted IP 108.1*****
Such application must be rejected at the initial stage itself. By accepting such application, the precious time of the honourable court is wasted . Such inhuman law enforcing officials must be punished without any loss of time.
மேலும் தொடரும் செய்திகள்

பழையாறு புதிய தடுப்பணைக்கு தடைகோரி வழக்கு: நகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 24, பிப்ரவரி 2021 5:19:57 PM (IST)

கழிவறைக்குள் 1 மணி நேரம் பரிதவித்த இளம்பெண் : நகராட்சி ஊழியரின் அலட்சியம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 8:32:53 PM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, பிப்ரவரி 2021 5:04:14 PM (IST)

திருச்செந்தூா் மாசித் திருவிழா: இரணியலிலிருந்து காவடி எடுத்துச்சென்ற பக்தா்கள்
வியாழன் 18, பிப்ரவரி 2021 4:59:02 PM (IST)

களியக்காவிளையில் ரூ. 1.5 கோடியில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் தீவிரம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 4:57:40 PM (IST)

மதுரை-கன்னியாகுமரி வரையிலான சுங்கச்சாவடிகள் மூட வாய்ப்பில்லை: மத்திய அரசு தகவல்
புதன் 17, பிப்ரவரி 2021 3:34:31 PM (IST)

THE TRUTHFeb 23, 2021 - 10:47:06 AM | Posted IP 162.1*****