» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாதுகாப்பற்ற முறையில் கரோனா கழிவுகள் வீச்சு : தூத்துக்குடியில் பரபரப்பு

திங்கள் 22, பிப்ரவரி 2021 8:42:45 AM (IST)

தூத்துக்குடியில் பாதுகாப்பற்ற முறையில் கரோனா கழிவுகளை கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொடர்பான மருத்துவ கழிவுகள் மாநகராட்சி மூலம் உரிய பாதுகாப்பன முறையில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் பாதுகாப்புடன் மாநகராட்சி குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்புடன் அழிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலை 4 முதல் 5 மணி அளவில் 3-ம் ரயில்வே கேட் பகுதியில் யாரோ மர்ம நபர் டிரைசைக்கிள் மூலம் மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் கரோனா தொடர்பான மருத்துவ கழிவுகளை கொட்டி தீவைத்து விட்டு செல்வது தெரியவந்து உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

நேற்று அதிகாலையில் ஒரு நபர் டிரை சைக்கிளில் 4 டிரம்களில் கரோனா நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகளான கவச உடை, சிரிஞ்சுகள், முககவசம், கையுறைகள் உள்ளிட்ட கழிவுகளை கொண்டு வந்து கொட்டினாராம். பின்னர் பாதுகாப்பற்ற முறையில் அதற்கு தீவைத்துவிட்டு அங்கிருந்து செல்ல முயன்று உள்ளார். இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து மத்தியபாகம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் தூத்துக்குடி மாநகராட்சி தற்காலிக பணியாளர் என்பது தெரியவந்து உள்ளது. இதனையடுத்து அவரை போலீசார் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

தூத்துக்குடி ஏரியா காரன்Feb 22, 2021 - 09:46:59 AM | Posted IP 173.2*****

மாநகராட்சியின் சாக்கடை பயலுகளால் தூத்துக்குடி அசுத்தமாக மாறி வருகிறது ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory