» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மத்திய அரசைக் கண்டித்து 22ம் தேதி ஆர்ப்பாட்டம் : கீதாஜீவன் எம்எல்ஏ அறிவிப்பு
வெள்ளி 19, பிப்ரவரி 2021 3:10:08 PM (IST)
தூத்துக்குடியில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வருகிற 22ம் தேதி திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை தாறுமாறாக உயா்த்திய மத்திய பா.ஜ.க அரசையும், அதற்கு துணைபோகும் மாநில அ.தி.மு.க அரசையும் கண்டித்தும், இந்த விலை உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் தி.மு.கழகம் சார்பில் வருகிற 22.02.2021 அன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆா்பாட்டங்கள் நடைபெறும் என தி.மு.கழக தலைவா் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்புக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் 22.02.2021 திங்கள்கிழமை காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி – பாளைரோடு சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் எதிரில் மாவட்ட பொறுப்பாளராகிய என்னுடைய தலைமையில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினா்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா் மற்றும் வார்டு, கிளைக் கழக செயலாளா்கள், பிரதிநிதிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், இளைஞரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி, மாணவரணி, தொண்டரணி, மீனவரணி, இலக்கிய அணி, வழக்கறிஞா் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளா் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, சிறுபான்மை அணி, வா்த்தகா் அணி, பொறியாளர் அணி, நெசவாளா் அணி, தகவல்தொழில் நுட்ப அணி, மருத்துவரணி, ஆதிதிராவிடர்நலஅணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் என அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆா்ப்பாட்டம் வெற்றியடையச் செய்திட கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழையாறு புதிய தடுப்பணைக்கு தடைகோரி வழக்கு: நகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 24, பிப்ரவரி 2021 5:19:57 PM (IST)

கழிவறைக்குள் 1 மணி நேரம் பரிதவித்த இளம்பெண் : நகராட்சி ஊழியரின் அலட்சியம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 8:32:53 PM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, பிப்ரவரி 2021 5:04:14 PM (IST)

திருச்செந்தூா் மாசித் திருவிழா: இரணியலிலிருந்து காவடி எடுத்துச்சென்ற பக்தா்கள்
வியாழன் 18, பிப்ரவரி 2021 4:59:02 PM (IST)

களியக்காவிளையில் ரூ. 1.5 கோடியில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் தீவிரம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 4:57:40 PM (IST)

மதுரை-கன்னியாகுமரி வரையிலான சுங்கச்சாவடிகள் மூட வாய்ப்பில்லை: மத்திய அரசு தகவல்
புதன் 17, பிப்ரவரி 2021 3:34:31 PM (IST)

kumarFeb 20, 2021 - 01:34:48 PM | Posted IP 162.1*****