» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

வியாழன் 18, பிப்ரவரி 2021 5:04:14 PM (IST)கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.

பிப்ரவரி 2021 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் இன்று (18.02.2021) முற்பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை அகஸ்தீஸ்வரம், தோவாளை, குருந்தன்கோடு, மற்றும் தக்கலை வட்டாரங்களிலுள்ள விவசாயிகளுக்கும், நண்பகல் 12.00 மணி முதல் 1.00 மணி வரை இராஜாக்கமங்கலம், கிள்ளியூர், முஞ்சிறை, மேல்புறம் மற்றும் திருவட்டார் வட்டாரங்களிலுள்ள விவசாயிகளுக்கும் நடைபெற்றது. திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 129 மனுக்களுக்கான பதில்கள் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை மூலம் சானல்களில் தண்ணீர் வரத்து மற்றும் குளங்களை தூர் வாருதல், நீர்நிலை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் போன்ற கேள்விகளுக்கு பதில்கள் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. நெல் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை, அரசு நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல், காட்டு விலங்குகளால் பயிர் சேதம், உழவர் கடன் அட்டைகள் (கிசான் கிரெடிட் கார்டு) தொடர்பான பதில்கள் விவாதிக்கப்பட்டது. தேக்கு மரங்கள் வெட்ட அனுமதி பெறும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய்த்துறைஇ கூட்டுறவுத் துறைஇ வனத்துறை, கால்நடைத்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி முன்னிலை வகித்தார். 

மேலும் வேளாண்மை துணை இயக்குநர் ம.முருகேசன், மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் (விவ) எம்.ஆர்.வாணி, கால்நடைத்துறை இணை இயக்குநர் கந்தசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, தோட்டக்கலை துணை இயக்குநர் ஒய்.ஷீலா ஜாண், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (பொறுப்பு) அருள்சன் பிரைட், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் மகேஷ் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory