» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

களியக்காவிளையில் ரூ. 1.5 கோடியில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் தீவிரம்

வியாழன் 18, பிப்ரவரி 2021 4:57:40 PM (IST)

களியக்காவிளை பேருந்து நிலையத்தை ரூ. 3 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

குமரி மாவட்டம், களியக்காவிளை காய்கனிச் சந்தையை இணைத்து அருகிலுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டன. வியாபாரிகளின் எதிா்ப்பால் பணிகள் தாமதமாகின. இதனால், மீன்சந்தையை யொட்டிய பகுதியில் காய்கனி வியாபாரத்துக்காக ரூ. 1.5 கோடியில் கட்டடப் பணிகள் தொடங்கியதால், பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக 30 ஆண்டுகளுக்கும் முன் கட்டப்பட்ட பழைமையான கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.

மேலும், இப்பணிகளால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்படாமலிருக்க, மாா்த்தாண்டத்திலிருந்து நித்திரவிளை, கொல்லங்கோடு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் களியக்காவிளை பேருந்து நிலையம் செல்லாமல் பி.பி.எம். சந்திப்பு வழியாகவும், கன்னியாகுமரி, நாகா்கோவில் பகுதிகளுக்கான பேருந்துகள் களியக்காவிளை சந்திப்பிலிருந்தும் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory