» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மதுரை-கன்னியாகுமரி வரையிலான சுங்கச்சாவடிகள் மூட வாய்ப்பில்லை: மத்திய அரசு தகவல்

புதன் 17, பிப்ரவரி 2021 3:34:31 PM (IST)

விருதுநகர் - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகள் அக்டோபர் 2021க்குள் முடிவடையும் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள நான்கு வழிச்சாலை புதுப்பித்தல், திட்ட மொத்த செலவு, மொத்த பராமரிப்பு செலவு, மொத்த வருமானம்  குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்குப் பதிலளித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரை முதல் கன்னியாகுமரி வரை கப்பலூர், எட்டுர்வட்டம் (சாத்தூர்), சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் இருப்பதாகவும் இந்த நான்கு சுங்கச் சாவடிகளின் மூலமாக இதுவரை கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2020 மார்ச் வரை 1041.96 கோடி ரூபாய் சுங்கவரி வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

மேலும், நான்குவழிச் சாலை அமைப்பதற்கான முதலீட்டுத் தொகை 31.01.2020 வரை 2113.95 கோடிகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் மார்ச் 2020 வரை 127.87 கோடிகள் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்திருக்கிறது. நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை மதுரை முதல் விருதுநகர் வரை மட்டுமே புதிதாக சாலை ஜூலை 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் முதல் கன்னியாகுமரி வரை  10 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய சாலை அமைக்கப்படவில்லை என்று கடந்த நவம்பர் 2020இல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 19.10.2021க்குள் சாலை புதுப்பிக்கும் பணிகள் முடிக்கப்படும் என தற்போது கிடைத்த தகவலில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை புதுப்பிக்கும் பணிகள் எப்போது தொடங்கும் எனத் தெரிவிக்கப்படவில்லை.

சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள சுங்கச் சாவடிகள் தற்போது மூடப்பட வாய்ப்பில்லை என ஏற்கெனவே நவம்பர் மாதத்தில் நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது. சுங்கச்சாவடிகளை மூடுவதற்கு முதலீட்டுத் தொகை மற்றும் பராமரிப்பு செலவுகள் நிறைவு பெறும் வரை சுங்க வரி வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


மக்கள் கருத்து

thamizhanFeb 17, 2021 - 06:50:37 PM | Posted IP 108.1*****

atha paathiya koraikkalaam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory