» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், 2 பிரிவுகளாக நடைபெறும் - ஆட்சியர் தகவல்

செவ்வாய் 16, பிப்ரவரி 2021 4:59:55 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், இரண்டு பிரிவுகளாக நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து வருகிற 19.02.2021 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரை ஆரோக்கியபுரம் முதல் பெரியகாடு வரையுள்ள மீனவர்கள் மற்றும் அனைத்து உள்நாட்டு மீனவர்களுக்கு முதற்கட்டமாகவும் பின்னர் முற்பகல் 11.30 மணி முதல் 1.30 மணி வரை இராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரை உள்ள மீனவர்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. 

எனவே மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட்ட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் / தேவைகள் அடங்கிய மனுக்களை 19.02.2021 அன்று நடைபெறும் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பிற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும்.

19.02.2021 அன்று பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அடுத்த மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும். கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் மீனவர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory