» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருமண ஆசைகாட்டி மாணவி பாலியல் பலாத்காரம் : தலைமறைவான வாலிபர் கைது!!

திங்கள் 15, பிப்ரவரி 2021 11:27:32 AM (IST)

புதுக்கடை அருகே திருமண ஆசைகாட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து தலைமறைவான வாலிபரை 2 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே எஸ்.டி.மங்காடு வாவறையை சேர்ந்த தேவதாஸ் மகன் சதீஸ் (30), கட்டிட தொழிலாளி. இவருக்கு பிளஸ்-2 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி அன்று அந்த மாணவியை சந்தித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவியை சந்திப்பதை அவர் தவிர்த்து வந்துள்ளார். 

மேலும், உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சதீஸ் கூறியதாகவும் தெரிகிறது.இதனால் மாணவி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் சதீஸ், அவரை ஒரு வாரத்தில் பதிவு திருமணம் செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் மாணவியின் சகோதரர்கள் திருமண பேச்சுவார்த்தை நடத்த சதீஸின் வீட்டிற்கு சென்றனர். அப்போது சதீஸின் குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்த புகாரின் பேரில் சதீஸ், அவரது தாயார் சுந்தரி (70), சகோதரர் ரதீஸ் (38) ஆகியோர் மீது குளச்சல் மகளிர் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்தார். இதனை அறிந்த சதீஷ் தலைமறைவாகி விட்டார். இந்தநிலையில் 2 மாதங்களுக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் சதீஸ் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory