» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிறுமியை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 14 ஆண்டு சிறை : நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 12, பிப்ரவரி 2021 12:31:46 PM (IST)

நாகர்கோவிலில் சிறுமியை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 14 ஆண்டுகள்சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் ரெதீஷ்(23) இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் கடந்த 2017-ம் ஆண்டு காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியிடம் பலமுறை தவறாக நடந்துள்ளார். பின்பு சிறுமி திருமணம் குறித்து கேட்டபோது ரெதீஷ் அதற்கு மறுத்து ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக அந்த சிறுமி நாகர்கோவில் அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரை விசாரித்த காவல் ஆய்வாளர் கண்மணி இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து,  குற்றவாளியை உடனடியாக கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இந்த வழக்கானது நாகர்கோவில்   மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிக்கு 14 வருடம் சிறை தண்டனையும் 12,000/- ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளரை வெகுவாக பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory