» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் பா.ஜனதாவுக்கு கேட்போம்: பொன்.ராதாகிருஷ்ணன்

வியாழன் 11, பிப்ரவரி 2021 4:25:03 PM (IST)

வரும் சட்டசபை தேர்தலில் குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் கேட்போம் என்று முன்னாள் மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் உருவாகியுள்ள அரசியல் சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது தி.மு.க. ஆட்சிக்கு வரவே முடியாது என நாங்கள் சொல்கிறோம். 

சில கட்சிகள் மதத்தின் பெயரை சொல்லி ஓட்டு கேட்கிறார்கள் என முதல்-அமைச்சர் கூறியிருப்பது, பா.ஜனதாவை இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டால் நாங்கள் விவசாய நகைக்கடன்களை தள்ளுபடி செய்வோம் என்றார், ஸ்டாலின். ஏன் தள்ளுபடி செய்யவில்லை. அதை முதலில் செய்யட்டும். அ.தி.மு.க. - பா.ஜனதா ஒரே கூட்டணியில் உள்ளது. எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் வரும் சட்டசபை தேர்தலில் குமரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளையும் கேட்போம். ஏன் இப்படி 6 தொகுதிகளையும் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்கிறார் என்று பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் கவலைப்படும். பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு சசிகலா வந்தபோது மிகப்பெரிய எழுச்சியாக இருந்ததை பார்த்தேன். அது அவர்களது கட்சிக்கு பலம் உள்ளதாக இருக்கும். நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம், முதல்வர் வேட்பாளரை அ.தி.மு.க. முடிவு செய்துவிட்டது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


மக்கள் கருத்து

NARTHAFeb 12, 2021 - 03:14:03 PM | Posted IP 173.2*****

APPO ARU THOGUTHIYEA POTHUMA ?

ராமநாதபூபதிApr 15, 1613 - 10:30:00 PM | Posted IP 162.1*****

மீதம் உள்ள 228 தொகுதி என்ன பாவம் செய்தது? அதையும் கேளுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory